ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மகளிர் தின வாழ்த்து!!!
மகளிர் தினத்தையொட்டி நாளை அ.தி.மு.க. கட்சி தலைமை அலுவலகத்தில் மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி தலைமையில் கேக் வெட்டப்படுகிறது. கடவுள் கோவிலில் சிலைகளாகவும், குடும்பத்தில் பெண்களாகவும் இருக்கிறாள்’’ என்றால் அதை மறுப்போர் யாரும் இருக்க முடியுமா? அன்பு அன்னையாய், ஆருயிர் மனைவியாய், அருமை மகளாய் எத்தனை வடிவில் தோன்றினாலும் பெண் என்பவள் தெய்வம் தான். அ.தி.மு.க.வின் தொண்டனுக்கு “அம்மா’’ என்னும் தலைவியும், தெய்வமானது அரிதினும், அரிதான அருங்கொடை அல்லவா? பெண்மையைப் போற்றி வணங்கவும், பெண் இன்றி உலகம் இல்லை என்பதை உணர்த்தவும், பெண்ணின் தியாக வாழ்வுக்கு வணக்கம் செலுத்தவும், ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8-ந்தேதி “சர்வதேச மகளிர் தினமாக’’ கொண்டாடப்படுகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஜஸ்டின்.