ஐ.எஸ்.எல் கால்பந்து: கேரளா பிளாஸ்டர்ஸ் – கோவா ஆட்டம் ‘டிரா’!!!

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெற்று வருகிறது. 
இந்த நிலையில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் கோவா அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த போட்டி 4-4 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் 4-வது இடம் பிடித்த கேரளா பிளாஸ்டர்ஸ் அரைஇறுதிக்கு முன்னேறியது.

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் ஏ.டி.கே. மோகன் பகான்-ஜாம்ஷெட்பூர் அணிகள் சந்திக்கின்றன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.

Leave a Reply

Your email address will not be published.