ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த சோகம்!!!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வல்லம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவரது குழந்தை மோகன்ராஜ்(வயது 8).சிறுவன் மோகன்ராஜ் வெங்கடேசன் மகன் தாஸ்(2) உடன் அருகே உள்ள தாங்கல் ஏரிக்கு மீன் பிடிக்க சென்றதாக கூறப்படுகின்றது. வெகுநேரமாகியும் சிறுவர்கள் இருவரும் வீட்டுக்கு வராததால் பெற்றோர்கள் தேடி சென்று உள்ளனர். அப்போது குழந்தைகள் இருவரும் தாங்கல் எரியில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அப்பகுதி மக்களின் உதவியுடன் குழந்தைகளை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இது குறித்து அறிந்த வளத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிறுவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.