இலங்கை: தினமும் 7 மணிநேர மின்வெட்டால் மக்கள் அவதி
போர் நடக்கும் உக்ரைன் நாட்டின் நிலைமையை விட, மிக மோசமான நிலையில் இலங்கை நாடு இருப்பதாக இலங்கைவாசிகள் கவலை தெரிவித்துள்ளனர். காலையில் 5 மணிநேரம், மாலையில் 2 மணிநேரம் என தினமும் 7 மணிநேரம் நாடு முழுவதும் மின்வெட்டு செய்யப்படுகிறது என தெரிவித்தனர். 1 லிட்டர் டீசல் விலை ரூ.220 விற்கப்படுகிறது. எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பது அன்றாட காட்சிகள் ஆகிவிட்டது என வேதனை தெரிவிக்கின்றனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.