ஐக்கிய அரபு அமீரக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கவுரவிக்க கோல்டன் விசா வழங்கி வருகிறது. கோல்டன் விசா வைத்து இருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள்.
சமீபத்தில் தமிழ் சினிமாவைச் சேர்ந்த திரிஷா, பார்த்திபன், அமலாபால், சிம்பு, உள்ளிட்ட பலருக்கு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதிக்கு அமீரகம் கோல்டன் விசா வழங்கியுள்ளது. 20 வருடங்களுக்கு முன்னால் விஜய் சேதுபதி துபாயில் கணக்காளராக பணிபுரிந்தார். தற்போது 2022-ல் கோல்டன் விசா வாங்கும் அளவிற்கு வளரச்சி அடைந்துள்ளார்.
விஜய் சேதுபதி தற்போது விக்ரம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து பாலிவுட்டில் கத்ரினா கைப்புடன் அவர் நடிக்க இருக்கும் ‘மெரி கிறிஸ்மஸ்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.
