மாறுவேடத்தில் சென்று மணல் கொள்ளையனை பிடித்த போலீசார்!!
புதுவை மாநிலம் பாகூர் அருகே உள்ள குருவிநத்தம் பகுதியில் ஆற்று மணல் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக பாகூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உத்தரவின் பேரில், குருவிநத்தம் பகுதிக்கு மாறுவேடத்தில் சென்று போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது வாழப்பட்டு பகுதியில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த மணல் மூட்டைகளை போலீசார் கண்டனர்.
அங்கிருந்தவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்றனர். சந்தேகமடைந்த போலீசார் ஒருவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது குருவிநத்தம் பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் ஆற்று மணலை சாக்கு மூட்டைகளில் கடத்தி வந்து தெரியவந்தது.
பின்னர் அவரை கைது செய்த போலீசார், அங்கு இருந்த 30-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.