தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில் 14,250 பேர் பலி!!!
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துகளில் 14,250 பேர் பலியாகியுள்ளனர். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு இதனை தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் கடந்த ஆண்டு 55 ஆயிரம் சாலை விபத்துகள் நிகழ்ந்திருப்பதாக கூறிய அவர், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக இயக்குதல், சீட் பெல்ட் மற்றும் தலைக்கவசம் அணிய தவறுதல் போன்றவற்றால் அதிகப்படியானோர் உயிரிழந்திருப்பதாக குறிப்பிட்டார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.