சுமி நகர தெருக்களில் கடும் துப்பாக்கி சண்டை- மக்கள் வீடுகளுக்குள் இருக்க உத்தரவு!!!
சுமியிலும் ரஷிய வீரர்கள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
மேலும் அங்கு வான் தாக்குதலும் நடத்தப்பட்டது. ரஷிய ராணுவத்துக்கு எதிராக உக்ரைன் வீரர்களும் சண்டையிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சுமி நகர தெருக்களில் ரஷிய- உக்ரைன் வீரர்கள் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. இரு தரப்பினரும் கடுமையான மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனால் மக்கள் வீடுகளுக்குள் இருக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது. பதுங்கு குழிகள் மற்றும் கட்டிடங்களின் அடிதளங்களில் பாதுகாப்பாக இருக்கு மாறும் வெளியில் வரவேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.
கடும் சண்டை காரணமாக சுமி நகர மக்கள் பதட்டத்தில் உள்ளனர். சுமி நகரில் இந்திய மாணவர்கள் சிலர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதனால் அந்நகரில் சண்டையை நிறுத்த வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.