‘எரியும் அடுப்பில் எண்ணெய் ஊற்றுவது போல’ கிரிமினல்கள், தங்களுக்கு கிடைத்த துப்பாக்கிகளை பயன்படுத்தி வருவதாக மக்கள் கண்ணீர்….
போரினால் மக்கள் ஏற்கனவே தங்களின் வாழ்வாதாரங்களை, உறவுகளை இழந்து, துயரத்தில் சோர்ந்து நிற்கும் நிலையில், ‘எரியும் அடுப்பில் எண்ணெய் ஊற்றுவது போல’ கிரிமினல்கள், தங்களுக்கு கிடைத்த துப்பாக்கிகளை தூக்கி கொண்டு கொலை, கொள்ளை, ஏன் பாலியல் பலாத்காரத்தை கூட பயன்படுத்தி வருவதாக மக்கள் கண்ணீர் விட்டு புலம்பும் வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.தலைநகர் கீவ்வில் இருந்து ரஷ்ய படைகள் தற்போது 10 கிமீ.க்கும் அப்பால்தான் உள்ளது. ஆனால், அவர்களே துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்துவது போன்ற பிம்பத்தை இந்த நகரில் கிரிமினல்கள் ஏற்படுத்துகின்றனர். குழப்பங்களை ஏற்படுத்தி வன்முறையை தூண்டிவிட்டு அல்லது உருவாக்கி, அவற்றை கட்டுப்படுத்துவது போன்ற நோக்கில் கொள்ளை, கொலை உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். இவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு ரஷ்ய படையினர் மீது பழியை போடுகிறார்கள் என்று மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கீவ் நகரின் முக்கிய தெருவில் நடந்தபடி ஒருவர் பேசி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘அதிபர் ஜெலன்ஸ்கியின் ஆட்சி கொடூரமானது. ரஷ்ய படைகளுடன் சண்டை போடுவதற்காக கிரிமினல்களுக்கு அவர் கொடுத்துள்ள துப்பாக்கிகளால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கிரிமினல்கள் இந்த துப்பாக்கிகளை பயன்படுத்தி கொள்ளைகளில் ஈடுபடுகின்றனர். பொதுமக்களை சுட்டு பணத்தை பறிக்கின்றனர். இப்போது நான் கூட பயந்து பயந்துதான் இந்த தெருவில் நடக்கிறேன். சூப்பர் மார்க்கெட் வந்தேன். எனக்கு பின்னால் இருந்து ரஷ்ய படைகளோ அல்லது உக்ரைன் வீரர்களே சுட்டு விடுவார்கள் என நான் நினைக்கவில்லை. கிரிமினல்கள் சுடுவார்கள் என்று பயப்படுகிறேன். ஜெலன்ஸ்கி செய்தது மிகவும் முட்டாள்தனமானது. கீவ் நகரில் நடக்கும் ஏராளமான குற்றச் செயல்களுக்கு ஜெலன்ஸ்கியின் ஆட்சியே காரணம் என்பதை மட்டும் உறுதியாக கூற முடியும்,’ என அவர் கூறியுள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.