சென்னை: தமிழகம் முழுவதும் சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பொறுப்பிற்கு அறிவிக்கப்பட்டவர்கள் அந்தந்த கட்சி கவுன்சிலர்கள் ஓட்டளித்து தேர்வு செய்து வருகின்றனர். காங்கிரசுக்கு ஒரு மேயர், இரு துணை மேயர் பதவிகளும், இ.கம்யூ., மா.கம்யூ., வி.சி.க., மதிமுக., உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா ஒரு துணை மேயர் பதவிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.இன்று காலை தமிழகம் முழுவதும் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடந்தது. பல பகுதிகளில் போட்டி இல்லாமல் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு கமிஷனர் மற்றும் அதிகாரிகள் பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்
