விமான எரிபொருள் விலை ஒரு வாரத்தில் 9% அதிகரிப்பு

ரஷியா – உக்ரைன் இடையிலான போர் எதிரொலியாக எரிபொருள் விலை கடுமையாக அதிகரித்து வருவதால் விமான டிக்கெட் கட்டணம் கணிசமாக உயர்த்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ரஷியா – உக்ரைன் போரால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய் 119 டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக விமான எரிபொருள் விலையை கடந்த 1 மாதத்தில் எண்ணெய் நிறுவனங்கள் 9% உயர்த்திவிட்டன. மார்ச் தொடக்கம் முதல் 1கிலோ லிட்டர் எரிபொருள் ரூ. 93,530ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டில் மட்டும் விமானங்களுக்கான எரிபொருள் விலை 57% உயர்த்தப்பட்டுள்ளது. விமான நிறுவனங்களின் இயக்குதல் செலவினத்தில் 40% எரிபொருளுக்கு மட்டும் ஒதுக்கப்படுகிறது. இதன் காரணமாக தொடர் எரிபொருள் விலையேற்றத்தால் ஏற்பட்டுள்ள சுமையை சமாளிக்க விமானக்கட்டணத்தை உயர்த்த விமான நிறுவனங்கள் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.

Leave a Reply

Your email address will not be published.