திசையன்விளையில் நடந்த திருப்பம்!!!!
திருநெல்வேலி: திசையன்விளை பேரூராட்சியை அதிமுக கைப்பற்றியது. பேரூராட்சி தலைவராக அதிமுகவின் ஜான்சி ராணி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திலும் திமுகவே அதிக இடங்களில் வாகை சூடியிருந்தது. திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பேரூராட்சியில் மட்டும் திமுகவுக்கு சறுக்கல் ஏற்பட்டது. மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் அதிமுக 9, திமுக, காங்கிரஸ் தலா 2, பாஜக, தேமுதிக தலா ஒன்று, சுயேச்சைகள் 3 இடங்களிலும் வென்றனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.