ஆடை கட்டுப்பாடு உள்ள கோவில் – அறிவிப்பு பலகை வைக்க உத்தரவு!!!
சென்னை : ஆடை கட்டுப்பாடு உள்ள கோவில்களில், அறிவிப்பு பலகை வைக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், முறையான ஆடை அணிந்து வரும்படியும் அறிவுறுத்தி உள்ளது. கோவிலுக்குள் லுங்கி, அரைக்கால் சட்டை அணிந்து பலர் வருகின்றனர். எனவே, ஹிந்து அல்லாதவர்கள் கோவில்களுக்குள் நுழைய அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பலகையை, நுழைவு வாயிலில் வைக்க வேண்டும். ஆடை கட்டுப்பாட்டையும் குறிப்பிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.ஆடை கட்டுப்பாடு உள்ள கோவில்களில், அறிவிப்பு பலகை வைக்க உத்தரவிட்டது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.