அணுமின் நிலைய உலை வெடித்தால் அதன் தாக்கம் செர்னோபிலை விட 10 மடங்கு பெரியதாக இருக்கும்:உக்ரைன் எச்சரிக்கை!!
உக்ரைனில் உள்ள ஐரோப்பியாவிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையம் ரஷிய படைகள் தாக்குதலுக்கு இலக்காக இருப்பதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் எனர்ஹோடா பகுதியில் ஐரோப்பியாவிலேயே மிகப்பெரிய அனல்மின் நிலையம் உள்ளது. ஸபோரிச்ஸியா என்பிபி என்று அழைக்கப்படும் 6 உலைகளை கொண்ட இந்த அணுமின் நிலையத்தை தவிர்க்க ரஷிய படைகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து அணுமின்நிலையத்தை காப்பாற்ற பிரதான பாதைகளில் அப்பகுதி மக்கள் தடைகளை ஏற்படுத்தி இருந்தன.
இருப்பினும் அணுமின் நிலையத்தை சுற்றி வளைத்த ரஷிய படைகள், அதிதீவிர தாக்குதல் நடத்தினர். இதில் ஸபோரிச்ஸியா அணுமின் நிலைய கட்டிடத்தின் ஒரு பகுதி தீப்பற்றி எரிந்தது. அனைத்து திசைகளில் இருந்தும் அணுமின் நிலையம் தாக்குதலுக்கு உள்ளானதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். பேராபத்தை ஏற்படுத்தும் அணு உலைகள் அமைந்துள்ள கட்டிடங்கள் தீப்பிடித்து எரிவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ள அவர், வெடிவிபத்து ஏற்பட்டால் 1986ல் செர்னோபினில் ஏற்பட்ட பேரழிவை விட 10 மடங்கு அதிக அழிவுகளை உக்ரைன் சந்திக்க நேரிடும் என்று அச்சம் தெரிவித்துள்ளார். இதனிடையே அணுமின் நிலையத்தில் பற்றிய தீ உரிய நேரத்தில் அணைத்து பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாக உக்ரைன் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஸபோரிச்ஸியா அணுமின் நிலையத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறியுள்ள சர்வதேச அணுசக்தி கழகம் கதிவீச்சின் அளவில் மாற்றம் ஏதும் இல்லை என்று கூறியுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.