பாதுகாப்பு படைவீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!!
சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் இருப்பவா் யஸ்பால் (26) ராஜஸ்தான் மாநிலத்தை சோ்ந்தவா். இவா் 2017 ஆம் ஆண்டில் பணியில் சோ்ந்தவா். யஸ்பால் கடந்த சில காலமாக சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் இருந்தாா். அப்போது விமான நிலைய கழிப்பறைக்குள் சென்றவா், திடீரென தனது கைத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தாா்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.