விமானப்படை விமானங்கள் மூலம் இந்தியர்களை மீட்க மோடி உத்தரவு
உக்ரைனில் சிக்கி உள்ள மாணவர்களை மீட்கும் ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தில் தற்போது ஏர் இந்தியா உள்ளிட்ட தனியார் விமான நிறுவனங்கள் மட்டுமே ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், பிரதமர் மோடியின் கோரிக்கையைத் தொடர்ந்து இந்திய விமானப்படையும் மீட்பு பணியில் ஈடுபட உள்ளது. விமானப்படையில் சி-17 விமானங்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. சி-17 விமானம் மூலம் ஒரே நேரத்தில் 350க்கும் மேற்பட்டவர்களை மீட்டு வர முடியும். கடந்த ஆண்டில், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய போது அங்கு சிக்கிய இந்தியர்களை மீட்பு வரும் பணியில் சி-17 விமானம் சிறப்பாக செயல்பட்டது.
இதனால் விமானப்படை களமிறங்குவதால் உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள் மீட்கும் பணி மேலும் விரைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், உக்ரைனில் இருந்து வெளியேறும் இந்திய மாணவர்களை அந்நாட்டு ராணுவப்படை அடித்து விரட்டுவதாகவும், வெளியேற விடாமல் தடுப்பதாகவும் சில வீடியோக்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன. இதற்கு பதிலளித்த ஒன்றிய அரசு தரப்பு அதிகாரிகள், ‘மற்ற நாடுகளை விட இந்தியா, தனது குடிமக்களை குறிப்பாக மாணவர்களை மீட்பதில் 24 மணி நேரமும் ஓய்வின்றி செயல்படுகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.