மே5ல் பிளஸ்2, மே9 ல் பிளஸ் 1 பொதுத்தேர்வு துவக்கம்..
சென்னை: பிளஸ் 2வுக்கு மே 5 ம் தேதியும் பிளஸ் 1க்கு மே 9 ம் தேதியும், பத்தாம் வகுப்புக்கு மே 6 ம் தேதியும் பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளன. சென்னையில் நிருபர்களை சந்தித்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது: பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வானது ஏப்ரல் 25 முதல் மே 2ம் தேதி வரை நடக்கும்.
பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 5 முதல் மே 28 வரையிலும்
பிளஸ் 1 மாணவர்களுக்கு மே 9 முதல் மே 31 வரையிலும்
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 முதல் மே 30 வரையிலும் பொதுத்தேர்வு நடக்கும்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.