மின் வாரியத்தில் போஸ்டர்மயம்!!!
சென்னை: ‘அரசு அலுவலகமா அல்லது கட்சி ஆபீசா’ என்று சந்தேகம் கொள்ளும் வகையில், மின் வாரிய தலைமை அலுவலக வளாகத்தில், அரசியல் கட்சிகளின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது, ஊழியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, அண்ணா சாலையில், மின் வளாகம் உள்ளது. அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கங்களை சேர்ந்த சிலர், மின் பகிர்ந்தளிப்பு மைய கட்டடம் உட்பட பல கட்டடங்களில் தங்கள் நிர்வாகிகளின் பிறந்த நாள், அவர்களின் உறவினர்களின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவிப்பது, ஆர்ப்பாட்ட போஸ்டர்களை ஒட்டி பாழாக்கி வருகின்றனர். இதனால், அதை பார்ப்பவர்கள், ‘அரசு அலுவலகமா அல்லது கட்சி ஆபீசா’ என்று சந்தேகம் கொள்ளும் வகையில் உள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ்.