புளியின் மகத்துவம்..

புளியம்பழத்தில் சதைப்பற்றில் டார் டாரிக் அமிலம் 8 சதவீதம் உள்ளது. சிட்ரிக் அமிலம் 4 சதவீதம் உள்ளது. அசிட்டிக் அமிலம், பொட்டாசியம், சர்க்கரை 4 சதவீதமும் உள்ளன.

கொட்டையில் கொழுப்புச்சத்தும், கார்போஹைட்ரேட்டும் 63 சதவீதம் உள்ளன.

நார்ச்சத்தில் பாஸ்பரஸ், நைட்ரஜன் முதலியன அடங்கியுள்ளன. பழத்தில் ஆர்சானிக் அமிலம் இருக்கிறது.

உடலில் ஏற்படும் பித்த வெடிப்புகளுக்கு பழம்புளியை நீரில் கரைத்து பனை வெல்லம் சேர்த்து குடிக்க, பித்தமும், பித்தத்தடிப்பும் குணமாகும்.

இதன் இலையின் கொழுந்தும் உடலுக்கு குளிர்ச்சி கொடுக்கும் வல்லமை உள்ளது.

இந்த இலையை அரைத்து மூட்டுவாத வீக்கம் மீது பற்றுப்போட்டால் வீக்கம் குறைந்து வலியும் குறையும்.

விளாம்பழத்தைச் சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிடுவதுபோல புளியம்பழத்தையும் சர்க்கரையுடன் சேர்த்துச் சாப்பிடுவதால் உடல் நல்ல குளிர்ச்சி பெறும்.

இதன் தோலைப் பொடித்து தூளாக்கி பல் துலக்கி வந்தால் பல் நோய் நீங்கும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஜஸ்டின்.

Leave a Reply

Your email address will not be published.