பல் வலிமைக்கு விளாம்பழம்…

 பல வியாதிகளைக் குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்புச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும், வைட்டமின் ‘ஏ’ சத்தும் உள்ளது.ஆயுளை நீட்டிக்கச் செய்யும்.நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும்.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.எலும்புகளுக்கு பலம் ஏற்படும்.ஜீரணக் கோளாறுகளை சரி செய்யும்.வயதானவர்கள் இதனை உண்டால், அவர்களுக்கு ஏற்படும் ‘ஆஸ்டியோ பொரோஸிஸ்’ என்னும் எலும்புகள் உடையக்கூடிய நோய் எட்டிப் பார்க்காது. பற்கள் கெட்டிப்படும்.ரத்தத்தை விருத்தியடையச் செய்யும். சீதபேதி குணமடையும். இதயத்திற்கு நல்ல பலத்தைத் தரும்.பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்ற நிலை இவைகளை விளாம்பழம் குணப்படுத்தும்.தலைவலி, கண் பார்வை மங்கல், மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை-கால்களில் அதிக வியர்வை இவைகளை சரிப்படுத்தும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.

Leave a Reply

Your email address will not be published.