நேட்டோ கூட்டமைப்பின் கடந்த கால சாதனைகள்….

லண்டன்: உக்ரைன் ராணுவமும் கடுமையாக எதிர்த்து போரிட்டு வருகிறது. 2வது பெரிய நகரமான கார்கிவ்வை கைப்பற்ற ரஷ்ய ராணுவம் இன்றுடன் 7வது நாளாக கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. கார்கிவ் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மைய சதுக்க கட்டிடத்தின் மீது ராக்கெட் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே நேட்டோ ராணுவ கூட்டமைப்பின் விரிவாக்கம் தாம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க மூலக்காரணம் என்று கூறப்படும் நிலையில் இது குறித்த கடந்த கால சாதனைகள் தொடர்பான செய்தி தொகுப்பு. 1991-ல் சோவியத் ஒன்றியம் மற்றும் இதர கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிச ஆட்சி வீழ்ந்த பின் பல்வேறு நாடுகளில் உள்நாட்டு போர்கள் வெடித்தன.

யூகோஸ்லோவியாவின் போஸ்னியா மாகாணம் தனி நாடக 1992-ல் பிரகடனம் செய்த பின் அங்கு வசித்த செர்பிய இனத்தவர்களுக்கும் போஸ்னிய மக்களுக்கும் இடையே உள்நாட்டு போர் தொடங்கியது. போஸ்னியா மக்கள் மீது ரஷ்ய படைகள் ஆதரவுடன் செர்பிய படைகள் இனப்படுகொலைகளை நிகழ்த்தின. பல ஆயிரம் போஸ்னிய மக்கள் ஈவு இரக்கம் இல்லாமல் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகினர். இனப்படுகொலையை தடுக்க 1995-ல் நேட்டோ கூட்டமைப்பு நாடுகள் செர்பிய ராணுவத்தின் மீது ஐநா அனுமதியுடன் வான்வழி தாக்குதல்களை நடத்தின. இதனால் பெறும் இழப்புகளை எதிர்கொண்ட செர்பிய ராணுவம் இனப்படுகொலைகளை நிறுத்திக் கொண்டது.

செர்பியாவின் ஒரு பகுதியான கொசோவோ தனி நாடாக பிரகடனம் செய்துகொண்ட பின் அதை எதிர்த்து செர்பிய ராணுவம் கடும் தாக்குதல்களை 1999-ல் தொடங்கியது.  கொசோவோவில் பெரும்பான்மையினராக அல்பேனிய இஸ்லாமியர்கள் மீது கொடூரமான இன அழிப்பை செர்பிய ராணுவம் மேற்கொண்டது. இதனை தடுக்க செர்பிய ராணுவ தளங்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்த ஐநாவில் தீர்மானம் ஒன்றை நேட்டோ நாடுகள் முன்வைத்தன. ஆனால் இதற்கு ரஷ்யா மற்றும் சீனா எதிர்ப்பு தெரிவித்ததால் தீர்மானம் நிறைவேறவில்லை. இதனை தொடர்ந்து ஐநாவின் அனுமதி இல்லாமல் 1999-ல் கொசோவோவில் இருந்த செர்பிய ராணுவத்தின் மீது நேட்டோ நாடுகள் வான்வழி தாக்குதல்களை நடத்தின.

அதனால் பெறும் இழப்புகளையும், சேதங்களையும் எதிர்கொண்ட செர்பியா இனப்படுகொலைகளை முற்றிலும் நிறுத்தியது. போஸ்னியா, கொசோவோ சுதந்திர நாடுகளாக உருவெடுத்தன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.

Leave a Reply

Your email address will not be published.