சருமம் காக்கும் ‘ஆளி விதை….

ஆளி விதை நம் நாட்டில் எப்போதோ நமது முன்னோர்கள் உபயோகப்படுத்தி வந்ததுதான். ஆனாலும், எண்ணெய் வித்துக்களில் முக்கியமான ஒன்று என்பதை வெளிநாட்டினர் கண்டுபிடித்து சொன்ன பிறகே இங்கு பிரபலமாகி வருகிறது. இதன் ஆங்கிலப் பெயர் ‘லின் சீட்ஸ்’ (Lin seeds).  ‘ஃப்ளேக் சீட்ஸ்’ என்பதற்கு லத்தீனில் ‘மிகவும் பயனுள்ளது’ என்றும் அர்த்தம் உண்டு. உலகத்திலேயே மிகவும் பழமை வாய்ந்த அதிக நார்ச்சத்து மிகுந்த உணவாக  உலக அளவில் கருதப்படும் உணவு இது. பழங்கால எகிப்து, சீனாவில் அதிகம் பயிரிடப்பட்டது. ஃப்ளேக்ஸ் சீட்சின் மகத்துவத்தை ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ் விளக்குகிறார்… இதில் நார்ச்சத்து மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இப்போது இதை கஞ்சி, போரிட்ஜ்களில் சேர்த்து பரவலாக உபயோகிக்கிறார்கள். ஆளி விதையை உடைத்தல், அரைத்தல் அல்லது க்ரஷ செய்வதன் மூலம் அதன் மீது இருக்கும் பாதுகாப்பு விதைக் கோட்டிங்கை அழித்து, ALA மற்றும் SDG அமிலங்களை வெளியேற்றிவிடக்கூடும். ஆனால், அரைத்த ஆளி விதைகளை வேகவைத்த பொருட்களில் சேர்க்கும்போது இந்த அமிலங்கள் சிதைவதைத் தடுக்கும். அதிக வெப்பமில்லாத இடங்களில் குறைந்த நாட்களுக்கு ஸ்டோர் செய்து வைத்து உணவில் சேர்த்துக் கொள்வதால் ALA மற்றும் SDG அமிலங்கள் சிதைவு ஏற்படாது. இதில் உள்ள கரையும் தன்மை உள்ள நார்ச்சத்து, கரையும் தன்மை அற்ற நார்ச்சத்து இரண்டுமே பல வகைகளில் நமக்கு நன்மை செய்யும். கொலஸ்ட்ராலை குறைக்கும். மலச்சிக்கலைத் தடுக்கும். இதில்  ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ் மிகுந்துள்ளதால் புராஸ்டேட் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், மலக்குழாய் புற்றுநோய் போன்றவை வராமல் பாதுகாக்கும். தினமும் உட்கொண்டால் புற்றுநோய்க் கட்டிகள் உருவாகாது. வந்தவர்கள் உட்கொண்டால் கட்டிகள் மேலும் பெருகாது என ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. தினமும் ஆளி விதை உட்கொண்டால் மூட்டுவலியைக் குறைக்கும். சருமத்துக்கும் நமது தலைமுடிக்கும் மினுமினுப்பைத் தரும். ஆளி விதை உட்கொள்வதன் மூலம் தோலின் ஈரத்தன்மை பாதுகாக்கப்படுவதால், தோல் வறட்சி, கூந்தலின் ஸ்கால்பில் ஏற்படும் வெடிப்பு, கூந்தல் உதிர்வு போன்றவை தடுக்கப்படுகிறது.  மேலும் தோலின் உணர்திறன் அதிகரிப்பதாகவும், தோலின் கடினத்தன்மையைப் போக்குவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.  Irritable bowel Syndrome-க்கான அறிகுறிகளைக் குறைப்பதில் ஆளிவிதை பயனளிக்கிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி குணசேகரன்.

Leave a Reply

Your email address will not be published.