கேதர்நாத் கோயில் நடை மே 6ம் தேதி திறப்பு
உக்கிமத்: பிரசித்தி பெற்ற கேதர்நாத் கோயிலின் நடை, மே மாதம் 6ம் தேதி பக்தர்களின் வழிபாட்டுக்காக திறக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம், உக்கிமத்தில் அமைந்துள்ள ஓம்காரேஷ்வரர் கோயில் மகாசிவராத்தி சிறப்பு பூஜை மற்றம் வழிபாடுகள் நேற்று நடைபெற்றது. பின்னர், கேதர்நாத் சிவன் கோயிலை திறப்பதற்கான தேதி குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதில், வரும் மே 6ம் தேதி கோயிலின் நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக, மே 2ம் தேதி ஓம்காரேஷ்வரர் கோயிலில் இருந்து பஞ்சமுக சிவன் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கேதர்நாத் கோயிலுக்கு பல்லக்கில் கொண்டு செல்லப்படும்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கீதா.