காஞ்சிபுரம் மோசடி மன்னன் தலைமறைவு!!!

உத்திரமேரூரில் பணம் மற்றும் நகைகளை பெற்றுக்கொண்டு மோசடி ஆசாமி தலைமறைவானதால் பாதிக்கப்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளனர்.உத்திரமேரூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 5 கோடி ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பல வாடிக்கையாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அமிர்தலால் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அவரது குடும்பத்தினருடன் திடீரென தலைமறைவாகினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.

Leave a Reply

Your email address will not be published.