அரிய வகை மூலிகை…ஆடாதோடை..
இதன் இலைகள் மிகவும் கசப்புத்தன்மை கொண்டவை. எனவே, ஆடு மாடுகள் இதனை உண்ணாது. ஆடு தொடாத இலை என்பதனால் ஆடு தொடா இலை என்பது மருவி ஆடாதோடை இலை என்று ஆயிற்று. ஒரு சிலர் இதனை ஆடாதொடை இலை என்றும் கூறுவர். ஆடு மாடுகள் நெருங்காது என்பதனால் இதனை தோட்டங்களில் வேலிப்பயிராக நட்டுவிடுவார்கள். சித்த மருத்துவத்தில் ஆடாதோடை செடியின் இலைகளை அதிகம் பயன்படுத்துவார்கள். பெரியவர்கள் என்றால் 25-30 மிலி, குழந்தைகளுக்கு என்றால் 5/15 மிலி, குழந்தைகளுக்குத் தரும் போது தேன் அல்லது வெல்லம் சேர்த்துத் தரலாம். இதன் மூலம் காய்ச்சல், இருமல், மார்புச்சளி ஆகியவை குணமாகும். குருதி அழல் எனப்படும் ரத்த அழுத்தம் இதனை அருந்த நன்மை பயக்கும். வழக்கமாக சாப்பிடும் ரத்த அழுத்த மாத்திரைகளுடன் இதனையும் சேர்த்து அருந்த அவர்களுக்கு ரத்த அழுத்தம் குறையும். இதன் கசப்பு சுவையால் வயிற்றில் உள்ள பூச்சிகள் சாகும். சிறு குழந்தைகள் பூச்சித் தொல்லையால் சரியாக சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு இதனை கொடுத்து வந்தால் வயிற்றில் பூச்சித் தொல்லைகள் நீங்கி நன்கு பசி எடுக்கும். குழந்தையின் ஆரோக்யம் மேம்படும். இலைகளை வதக்கி மூட்டு வீக்கத்திற்கு சூடு பொறுக்கும் பதத்தில் பற்றிடலாம். ஆடாதோடை இலைச் சாற்றுடன் சிறிதளவு தேன் சேர்த்து அருந்த மூக்கில் இருந்து வடியும் ரத்தம் நிற்கும். இதன் மலர்கள் வெள்ளை நிறமாக பார்க்க அழகாக இருக்கும். இதனை வதக்கி கண்கள் மீது வைத்தால் கண் எரிச்சல் தீரும். பச்சை இலைகளை நிழலில் உலர்த்தி ஒரு காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து வைத்துக் கொண்டால் தேவைப்படும்போது உபயோகப்படுத்தலாம்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.