10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி சற்று நேரத்தில் அறிவிப்பு…
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியாகிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இது தொடர்பான அறிவிப்பை இன்று மதியம் வெளியிடவுள்ளார். இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ்.