வெள்ளத்தில் மிதக்கும் ஆஸி.!!!
பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் மாகாணத்தில் கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிரிஸ்பேன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளப்பெருக்கு காரணமாக கோல்டு கடற்கரை ஓர பகுதிகளில் அபாயம் நிலவுவதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 130 பேரை மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர். மேலும் குயின்ஸ்லாண்ட் தலைநகரான பிரிஸ்பேனில் வெள்ளத்தால் ஏற்பட்ட சம்பவங்களில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். 2145 வீடுகள் மற்றும் 2356 வணிக வளாகங்கள் நீரில் மூழ்கி தத்தளிக்கின்றன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.