முகத்தை பளிங்கு மாதிரி மாத்தற கொத்தமல்லி பேஸ்பேக்….

கொத்தமல்லி இலையில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இதன் தண்டு, இலை, விதை ஆகியவற்றில் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்திருக்கும் கொத்தமல்லியில் வைட்டமின் ஈ யும் அதிக அளவில் நிறைந்திருக்கிறது. இது சருமப் பராமரிப்புக்கு மிகவும் மிகுந்தது. மாசுக்கள் மற்றும் தூசுகளால் சருமப் பிரச்சினைகள் அதிகம் உண்டாகின்றன.சூரிய ஒளியின் அதிகப்படியான வெப்பத்தால், புறஊதாக் கதிர்களின் தாக்கத்தால் சருமம் பாதிப்படைகிறது.சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதனால் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் உண்டாகும். மூக்கு, வாய்க்குக் கீழ்ப்பகுதி மற்றும் நெற்றியில் அதிக அளவில் கரும்புள்ளிகள் இருக்கும். அவற்றைக் குறைக்க கொத்தமல்லி பெரிதும் உதவும். 2 ஸ்பூன் கொத்தமல்லி சாறெடுத்து அதனுடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறைக் கலந்து முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் அப்ளை செய்து, 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். வாரத்தில் இதை இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் கரும்புள்ளிகள் குறையும். இந்த பிரச்சினைகளைச் சரிசெய்ய கொத்தமல்லி இலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கொத்தமல்லி இலையை எந்தெந்த சருமப் பிரச்சினைகளுக்கு எப்படி பயன்படுத்தலாம் என்ற பார்க்கலாம். 2 ஸ்பூன் கொத்தமல்லி சாறுடன் 2 ஸ்பூன் பால் மற்றும் அதே அளவு வெள்ளரிக்காய் சாறும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து நன்கு 5 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும். பிறகு குளிர்ந்த நீர் கொண்டு முகத்தைக் கழுவுங்கள். வாரத்திற்கு 2 நாட்கள் இதை முயற்சி செய்து பாருங்கள். ஓரிரு வாரங்களில் சருமத்தில் நல்ல மாற்றம் உண்டாகும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.

Leave a Reply

Your email address will not be published.