தேனில் ஊறவைத்த சின்ன வெங்காயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உண்டாகும் நன்மைகள்…
சின்ன வெங்காயத்தில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றன. இந்த சின்ன வெங்காயத்தை வெறும் வயிற்றில் தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் பல ஆரோக்கிய மாற்றங்கள் தென்படும். வெங்காயத்தில் சல்பர் இருக்கிறது. குறிப்பாக, சின்ன வெங்காயத்தில் சல்பர் சத்து மிக அதிகம். அதனால் இதை உணவில் தினசரி சேர்த்துக் கொள்வதால் உடல் வலிமை பெறும். பருவ கால நோய்த்தொற்றுக்கள் ஏற்படாமல் தவிர்க்க இயலும். தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் தேனில் ஊறவைத்த வெங்காயத்தைச் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி, ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. சின்ன வெங்காயம், தேன் இரண்டுக்குமே நச்சுக்களை முறிக்கும் தன்மை உண்டு. தேனில்ஊற வைத்த சின்ன வெங்காயத்தை காலையில் வெறும் வயிற்றில் தினமுமு் இரண்டு வீதம் சாப்பிடும் போது, அது உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கி, ரத்தத்தில் உ்ளள பிற கழிவுகளை வௌியேற்றுவதோடு ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பையும் வெளியேற்றுகிறது. இன்சோம்னியா பிரச்சினையை சின்ன வெங்காயம் தீர்க்கும் தன்மை கொண்டது. இந்த தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயத்தை தினசரி காலையில் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து தொப்பை குறையும். குறிப்பாக, அடி வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றியுள்ள ஊளைச்சதையைக் குறைக்கும்.ஒரு சுத்தமாக பாத்திரம் அல்லது கண்ணாடி பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் நன்கு தோலுரித்து இரண்டாகக் கீறிய (அப்போதுதான் தேனுடன் ஊறும்) சின்ன வெங்காயத்தைப் போட்டு அது முழுகும் அளவுக்கு தேனை ஊற்ற வேண்டுமஇரண்டு நாட்கள் அப்படியே ஓரமாக, கைபடாமல் எடுத்து வைக்க வேண்டும்.இரண்டு நாட்கள் கழித்து சின்ன வெங்காயத்தில் தேன் நன்றாக இறங்கியிருக்கும். நீங்கள் வைத்ததை விட சற்று நீர்த்துப் போயிருக்கும். ஏனெனில் வெங்காயத்தில் உள்ள நீர்ச்சத்தும் தேனுடன் சேர்ந்து ஊறியிருக்கும்.இதை தினமும் காலையில் வெறும் சாப்பிட்டு வர நிறைய பலன்கள் கிடைக்கும்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.