வேலூர் டூ திருப்பதிக்கு இனி இலவச பயணம்…
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதி மக்களுக்கு திருப்பதி செல்ல இலவச மினி பேருந்து சேவையை சட்டமன்ற உறுப்பினர் ஏபி நந்தகுமார் துவக்கி வைத்தார்.இந்த இலவச பேருந்து சேவையை பள்ளிகொண்டா ரங்கநாதர் கோவிலில் இருந்து எம்.எல்.ஏ நந்தகுமார் நேற்று கொடிசைத்து துவக்கி வைத்தார். அடுத்த 19 மாதங்கள் நான் இந்த பதவியில் இருப்பேன். அதுவரை வாரத்திற்கு 6 நாட்கள் திருமலைக்கு பொதுமக்கள் இலவச தரிசனம் செய்து திரும்ப என்னுடைய சொந்த செலவில் ஏற்பாடு செய்துள்ளேன்
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.