மாமல்லபுரம் வந்த ஜெர்மன் தம்பதி!!!
படுக்கையறை, சமையல் அறை, குளியல் அறை உள்ளிட்ட சொகுசு வசதிகள் கொண்ட நவீன வாகனத்தில் 91 நாடுகளை சுற்றிவரும் ஜெர்மன் தம்பதியினர், மாமல்லபுரம் சுற்றுலா வந்தனர். ஐரோப்பா கண்டத்தில் உள்ள ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர் தோல்பன் (வயது 39). இவருடைய மனைவி மிகி (36). இவர்கள் கடந்த 12 வருடமாக இஸ்ரேல், இங்கிலாந்து, நியூசிலாந்து, துபாய் உள்ளிட்ட 91 நாடுகளை சுற்றி வந்தனர். தற்போது இந்தியா வந்துள்ளனர். இந்த நவீன சொகுசு வாகனம் படுக்கை வசதி, சமையல் அறை, குளியலறை உள்ளிட்ட வசதிகளை கொண்டதாகும். மேலும் மலை பிரதேசம், கரடு முரடான பாதைகளில் பயணிக்கும் வகையில் இதன் டயர்கள் பொருத்தப்பட்டு உள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.