போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ரஷியா விடுத்த அழைப்பை ஏற்றதையடுத்து உக்ரைன் குழு பெலாரஸ் சென்றது!

போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ரஷியா விடுத்த அழைப்பை ஏற்றதை அடுத்து உக்ரைன் குழு பெலாரஸ் சென்றுள்ளது. போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ரஷியா அழைத்த நிலையில், அதில் பங்கேற்க உக்ரைன் மறுப்பு தெரிவித்து வந்தது. இதனால், மின்ஸ்,ஹோமெல் ஆகிய பகுதிகளில் நடைபெற இருந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் பங்கேற்கவில்லை. பின்னர் பெலாரஸ் எல்லையை ஒட்டிய நதிக்கரை அருகே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டதை அடுத்து அதில் பங்கேற்க உக்ரைன் சம்மதித்துள்ளது.

பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் ரஷிய பிரதிநிதிகள் ஏற்கனவே அங்கு சென்றுவிட்ட நிலையில், உக்ரைன் தனது தரப்பு பிரதிநிதிகளை பெலாரஸ் நாட்டிற்கு அனுப்பிவைத்துள்ளது. தற்போது உக்ரைன் தரப்பு அமைதிக்குழு பேச்சுவார்த்தை மையத்தை வந்தடைந்துள்ள நிலையில், விரைவில் ரஷிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. உக்ரைனில் ரஷியாவின் தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், பெலாரஸ் பேச்சுவார்த்தையில் இரு நாடுகள் இடையே சுமூக உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.

Leave a Reply

Your email address will not be published.