பிச்சை எடுக்கும் போராட்டம் – இந்து முன்னணியினர் !!!
விளாத்திகுளம் அருகே சுதந்திரப் போராட்ட வீரருக்கு நினைவிடம் அமைக்க கோரி பொதுமக்களிடம் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்திய இந்து முன்னணியினர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் கிராமத்தில் வாழ்ந்த தமிழ் சினிமாவின் முதல் பாடலாசிரியர் மதுரகவி பாஸ்கரதாஸ் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் அரசவையில் போர்ப்படைத் தளபதியாக இருந்த தானாதிபதி பிள்ளைக்கு நினைவிடம் அமைக்க கோரி இந்து முன்னணியினர் நாகலாபுரத்தில் வீதி வீதியாக பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.