பாகிஸ்தான் சூப்பர் லீக்: கோப்பையை வென்றது லாகூர் அணி
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இறுதி போட்டி லாகூரில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முல்டான் சுல்தான்ஸ் மற்றும் லாகூர் ஹாலான்டர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த லாகூர் அணி நிர்ணயிக்கபட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நட்சத்திர வீரர் முகமது ஹவிஸ் 46 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார்.
இதை தொடர்ந்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது சுல்தான்ஸ் அணி. தொடக்க வீராக களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் 14 ரன்களில் வெளியேறினார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் சோபிக்காத நிலையில் அந்த அணி 19.3 ஓவர்களில் 138 அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் 42 ரன்கள் வித்தியாசத்தில் லாகூர் அணி வெற்றி பெற்றது.
லாகூர் அணி தரப்பில் அந்த அணியின் கேப்டன் ஷாஹீன் ஷா அப்ரிடி 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் லாகூர் அணி பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் முதல் முறையாக கோப்பையை வென்றது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.