ஏ.டி.எம். யில் பணம் எடுத்து தருவதாக ரூ.1½ லட்சம் மோசடி!!
மதுரை அருகே ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்து தருவதாக ரூ.1½ லட்சம் மோசடி செய்த நெல்லை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.ஏ.டி.எம். மையம்மதுரை மாவட்டம் இளமானூர் அருகே உள்ள பொட்டபனையூர் ஆர்.எம்.காலனியை சேர்ந்தவர் சவுந்தரபாண்டி (வயது 54). இவர் வங்கியில் ரூ.2 லட்சம் கடன் வாங்கினார். அந்த பணம் அவரது வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டது.அப்போது 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சவுந்தரபாண்டிக்கு பணம் எடுப்பதற்கு உதவினார். ஆனால் பணம் எடுக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து சவுந்தரபாண்டி வீட்டிற்கு வந்து விட்டார். அப்போது அவரது செல்போனுக்கு வங்கி கணக்கில் இருந்து ரூ.1½ லட்சம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.