ஏராளமான நன்மைகளை தரக்கூடிய தர்பூசணி !!!

தர்பூசணி பழத்தை வெறும் உடல் வெப்பத்தை குறைக்கூடியது என்று சொல்லிவிட முடியாது. இது ஏராளமான நன்மைகளை தரக்கூடிய தர்பூசணி. பழங்களைப் பொறுத்தவரை, தர்பூசணி பழத்தில் கலோரிகளில் மிகக் குறைவாக உள்ளது. மேலும் தர்பூசணிபழத்தில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உட்பட பல ஊட்டச்சத்துக்களும் உள்ளன.தர்பூசணிபழத்தில் குறிப்பாக வெள்ளை பகுதியில் சிட்ரூலின் சத்து உள்ளது, இது தமனி செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, இரத்த நாளங்கள் ஓய்வெடுக்க உதவுவதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.தர்பூசணியில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் உங்கள் இதயத்திற்கு நல்லது. இதில் வைட்டமின்கள் ஏ, பி 6, சி, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை இதயம் சம்பந்தமான நோய்கள், பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.தர்பூசணியில் வைட்டமின்கள் ஏ மற்றும் சி உள்ளது. இது தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு முக்கியம். வைட்டமின் சி உங்கள் சருமத்தை மென்மையாகவும், தலைமுடியை வலுவாகவும் வைத்திருக்க உதவுகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.

Leave a Reply

Your email address will not be published.