பந்தலூர்: பந்தலூர் அருகே பிதர்காடு சூசம்பாடி பகுதியில் வசித்துவருபவர் கூலித்தொழிலாளி முகமது. இவர் மாடுகள் வளர்த்து வந்தார். மேய்ச்சலுக்கு சென்று திரும்பி வராததால் நேற்று மாடுகளை தேடி அருகே உள்ள தேயிலைத்தோட்டம் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு இரண்டு பசுமாடுகளையும் மர்ம விலங்குகள் தாக்கி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். சம்பவம் குறித்து முகமது வனத்துறை மற்றும் வருவாய்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார் சம்பவ இடத்திற்கு பிதர்காடு வனத்துறையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அசோக்குமார் உள்ளிட்டோர் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.
