வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி!!!

திருக்கோவிலூர் அருகே கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கி மோசடி செய்த முதியவர் அடித்துக் கொலை. திருக்கோவிலூர்  அடுத்த காங்கியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. 64 வயதுடைய முதியவரான இவர், மூங்கில்துறைப்பட்டைச் சேர்ந்த குப்பன் மகன் கோபால் என்பவரிடம், அவரது மகளுக்கு கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 2 ஆண்டுகளுக்கு முன் 2 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், வேலையும் வாங்கித் தராமல், வாங்கியப் பணத்தையும் திரும்பத் தராமல் ஏழுமலை மோசடி செய்து, ஏமாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி குணசேகரன்.

Leave a Reply

Your email address will not be published.