நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்…

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 276 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது
இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச், மைதானத்தில் நேற்று தொடங்கியது இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில்  பேட்டிங்கை தேர்வு செய்தது .

அதன்படி தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக டீன் எல்கர் , சரேல் எர்வீ களமிறங்கினர் .இவர்கள் சிறப்பாக விளையாடி  தொடக்க விக்கெட்டுக்கு 111 ரன்கள் சேர்த்தனர்  .அதன் பிறகு முதல் விக்கெட்டாக கேப்டன் டீன் எல்கர் 41 ரன்களில் ஆட்டமிழந்தார் .தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சரேல் எர்வீ அவர் 108 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி  3 விக்கெட்டுக்களை இழந்து 238 ரன்கள் எடுத்து இருந்தது.ராசி வெண்டர் டசன் 13 ரன்களிலும் ,டெம்பா பவுமா 22 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ராசி வெண்டர் டசன் 35 ரன்களிலும் , டெம்பா பவுமா  29 ரங்களிலும் நடையை கட்ட தென் ஆப்பிரிக்க  அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து  தடுமாறியது.

இரண்டாவது நாள் உணவு இடைவேளையின் போது  தென் ஆப்பிரிக்கா அணி  7 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் குவித்துள்ளது. நியூசிலாந்து தரப்பில் வாக்னர் மற்றும் மேட் ஹென்றி 3 விக்கெட்களையும் , டிம் சௌதீ 1 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.

Leave a Reply

Your email address will not be published.