திருநங்கையருக்கு விருது: விண்ணப்பிக்க அழைப்பு!!!

சென்னை:சொந்த முயற்சியில் படித்து முன்னேறிய திருநங்கையருக்கு, தமிழக அரசு சார்பில், 2021 – 22ம் ஆண்டிற்கான முன்மாதிரி விருதுகள் வழங்கப்படவுள்ளன.இதற்கு, அரசு உதவி பெறாமல், தானாகவே சுயமாக வாழ்க்கையில் முன்னேறியிருக்க வேண்டும். குறைந்தது ஐந்து திருநங்கையர் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும்.அதேபோல், திருநங்கையர் நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது. இந்த தகுதியுள்ள திருநங்கையரின் விண்ணப்பங்கள் மட்டுமே, விருதுக்கு பரிந்துரைக்கப்படும்.தகுதியுள்ள திருநங்கையர், awards.tn.gov.in என்ற இணைதளத்தில் விண்ணப்பம் செய்து, உரிய ஆவணங்களுடன் கருத்துருவை, சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில், வரும் 28ம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.

Leave a Reply

Your email address will not be published.