டெல்லியில் 2021ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு
நாட்டின் தலைநகர் டெல்லியில் முந்தின ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 21% அதிகரித்து உள்ளன.
இந்தியாவில் கொரோனா பாதிப்புகளால் 2 ஆண்டுகளுக்கும் கூடுதலாக ஊரடங்கு உத்தரவுகள், வருவாய் இழப்பு ஆகியவற்றால் நாடு பேரிடரை சந்தித்து வருகிறது. எனினும், தலைநகர் டெல்லியில் கடந்த 2020ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2021ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து உள்ளன.
இதுபற்றி டெல்லி போலீஸ் ஆணையாளர் ராகேஷ் ஆஸ்தானா கூறும்போது, கடந்த 2020ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 1,618 ஆக பதிவாகி இருந்தது. இது, கடந்த 2021ம் ஆண்டில் 1,969 ஆக அதிகரித்து உள்ளது. இது 21% அதிகம் ஆகும்.
98.78% வரையிலான பாலியல் வன்முறை சம்பவங்கள் தெரிந்த நபர்களாலேயே நடந்துள்ளன என கூறியுள்ளார். கடந்த 2020ம் ஆண்டுடன் (7 ஆயிரம்) ஒப்பிடும்போது, 2021ம் ஆண்டில் (8,800) செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. இது 17% அதிகம் ஆகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.