சீக்கிரம் இந்தியா அழைத்துச்செல்லுங்கள் மாணவரின் வீடியோ வைரல்!!!
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உக்ரைன் நாட்டில் கல்வி பயின்று வருகிறார்கள். உக்ரைனில் தற்போது போர் நடந்து வருவதால் அங்கு சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் முத்தியால்பேட்டையை சேர்ந்த நித்திஷ்குமார் என்ற மருத்துவ மாணவர், தன்னை மீட்க கோரி உக்ரைன் நாட்டில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். உக்ரைனில் உணவு பற்றாக்குறை உள்ளதாகவும், விரைவில் தங்களை இந்தியா அழைத்து செல்ல கோரியும் புதுச்சேரியை சேர்ந்த மாணவர் ஒருவர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.