எலும்புகளின் வலிமையை பராமரிக்க உதவும் நிலக்கடலை!!!!

நிலக்கடலையில் பெண்களுக்கு தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் நிறைந்துள்ளன.

நிலக்கடலையை தினமும் சாப்பிட்டு வருபவர்களுக்கு மூளையின் செயல்திறன் அதிகரிப்பதோடு, கூர்மையான நினைவாற்றல் உண்டாவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.

நிலக்கடலையில் உள்ள வைட்டமின் பி3 மற்றும் நியாசின் போன்ற வேதிப்பொருட்கள் நினைவாற்றலை அதிகரிக்கிறது. மேலும் மூளை மற்றும் நரம்பு மண்டலம் ஆரோக்கியமாக செயல்பட உதவுகிறது.

நிலக்கடலை சாப்பிடுவதால் இதில் உள்ள மாங்கனீசு மற்றும் பாஸ்பரஸ் மற்றும் பிற வைட்டமின்கள் எலும்புகளின் வலிமையைத் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது,

நியாசின், வைட்டமின் பி 3 மற்றும் ஆக்ஸிஜனேற்ற-ஒலிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்கள் சுருக்கங்களைத் தடுக்க உதவுவது. மேலும் பல்வேறு தோல் நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகின்றன.

குழந்தைகளின் வளர்ச்சிக்கு அவசியமான புரதசத்தின் தேவையை நிலக்கடலை சாப்பிட்டால் பூர்த்தி செய்ய முடியும்

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.

Leave a Reply

Your email address will not be published.