சர்க்கரையை கட்டுப்படுத்தும் சிறுகுறிஞ்சான்…

சிறுகுறிஞ்சான் செடி என்றால் சிலருக்கு மட்டுமே தெரியும். அதுவே ‘சர்க்கரைக் கொல்லி’ என்ற பெயரைப் பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள். சர்க்கரை நோய் அதிகமாகிவிட்ட காலத்தில் சிறுகுறிஞ்சான் செடிக்கும் மவுசு ஏற்பட்டிருக்கிறது. இதன் மருத்துவ குணங்கள் என்னவென்று தெரிந்துகொள்வோம்…சிறுகுறிஞ்சானின் தாவரவியல் பெயர் Gymnema sylvestris என்பதாகும். அஸ்கெல்பியாடேசே(Asclepiadaceae) தாவர குடும்பத்தைச் சார்ந்தது. கொடியாக படரும் தாவரமான சிறுகுறிஞ்சானின் இலை சிறியதாகவும், இலையின் நுனி கூர்மையானதாகவும் இருக்கும். சிறுகுறிஞ்சான் ரத்த சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது. இது தினமும் இன்சுலின் ஊசி போடும் டைப் 1 சர்க்கரை நோயாளியின் நோயைக் கட்டுப்படுத்த
உதவுகிறது.ஒரு சில பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படுவதில் சிக்கல் ஏற்படும். மாதவிலக்கு சரியாக ஏற்பட ஒரு கைப்பிடி சிறுகுறிஞ்சான் இலைகளுடன், 2 கைப்பிடி அளவுகளா இலைகளையும் சேர்த்து, நன்றாக மைய அரைத்து, பசையாக்கி, தினமும் காலை வேளைகளில் வெறும் வயிற்றில் ஒரு நாள் மட்டும் உட்கொள்ள மாதவிலக்கு குறைபாடுகள் நீங்கும்.மன அழுத்தம் மற்றும் ஊட்டச்சத்து இல்லாத உணவுகள் சாப்பிடுவதால் நரம்புகள் தளர்ந்து நரம்புத்தளர்ச்சி, வாதம் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாகின்றன. சிறுகுறிஞ்சான் இலைகளை பொடி செய்து, கலந்து சாப்பிடுபவர்களுக்கு நரம்புகள் வலிமை பெற்று நரம்புத் தளர்ச்சி குறைபாடுகளை நீக்குகிறது.
சிறுகுறிஞ்சான் இலைகளை கஷாயம் செய்து அருந்தி வருபவர்களுக்கு நல்ல பசி தூண்டப்பட்டு, உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.கடுமையான கோடை காலங்கள் மற்றும் இதர காரணங்களால் ஒரு சிலருக்கு உடல் வெப்பம் அதிகரித்து பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சிறுகுறிஞ்சான் இலைகளை  செய்து, கஷாயமாக காய்ச்சி, ஆற வைத்து அருந்துபவர்களுக்கு உடல் சூடு தணிந்து, உடல் குளுமை அடையும்.
உடலில் வாதம், பித்தம், கபம் என்கிற முக்குணங்கள் சமமாக இருக்க வேண்டும். இதில் அதிக நேரம் கண் விழிப்பதாலும், பித்தத்தை அதிகரிக்கிற உணவுகளை அதிகம் சாப்பிடுவதாலும் உடலில் பித்தத்தன்மை அதிகரித்து பல பாதிப்புகளை உண்டாக்குகிறது. சிறுகுறிஞ்சான் இலைகளை காயவைத்து, பொடியாக்கி இளம் சூடான நீரில் கலந்து அருந்துபவர்களுக்கு பித்தம் உடனடியாக நீங்கும்.
தற்போது அதிக கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடுவதாலும் மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கும் Fatty Liver  என்று சொல்லப்படும் வீக்கம் வருகிறது. இதற்கு சிறுகுறிஞ்சான் வேர் நல்ல மருந்து.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.

Leave a Reply

Your email address will not be published.