ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ விபத்து!!!
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கேத்தி ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது இங்கு சாத்தூர், கேத்தி பாலாட, எல்லநள்ளி போன்ற பகுதிகளில் இருந்து பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். நேற்று இரவு திடீரென இந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தில் தீப்பற்றி மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது இதனை கண்ட மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். கொரோனா தடுப்பு மருந்து உள்ளிட்ட உபகரணப் பொருட்களும் முகக் கவசங்கள், பி பி கிட்டுகள், சானிட்டரி பாட்டில்கள் இங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்தது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.