எழுத்தாளர் முகம் மாமணி வயது மூப்பால் இன்று காலமானார்..
சென்னை: எழுத்தாளர் முகம் மாமணி(91) வயது மூப்பால் இன்று காலை காலமானார். பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு வாழ்க்கையை அதன்படி அமைத்து கொண்டவர் முகம் மாமணி. இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக முகம் என்ற இலக்கிய இதழின் மூலமாக தமிழ் படைப்பாளிகளை ஊக்குவித்து வந்தவர். இவரின் இறுதி ஊர்வலம் மாலை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஜஸ்டின்