எடை குறைப்புக்கு உதவும் வேப்பம்பூ!!!!
வேப்பம் பூக்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, நீரில் ஊற வைத்து தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் பருமன் குறையும்.
வேப்ப மரம் பல நன்மைகளைக் கொண்டது. வேம்பின் இலை, பூ, பழம், பட்டை, காய் என அனைத்து பாகங்களும் மருத்துவப் பயனுள்ளவை. வேப்பம் பூவுக்கு தென்னிந்திய சமையலில் முக்கிய பங்குண்டு. இதைக் கொண்டு ரசம், பச்சடி, குழம்பு தயார் செய்து சாப்பிடுவார்கள்.
வேப்ப மரம் என்றாலே நினைவிற்கு வருவது கசப்புத் தன்மைதான். வேப்பிலை போன்று இல்லாமல், வேப்பம் பூ ‘சிறுகசப்பு’ சுவையுடன் இருக்கும்.
வேப்பம் பூவிற்கு செரிமானத்தை அதிகப்படுத்தும் சக்தி உண்டு. இதை எண்ணெய் அல்லது நெய்யில் பொரித்து சாப்பிடும்போது வாயுத்தொல்லை, வயிற்று வலி போன்றவற்றை குணமாக்கும்.
வேப்பம் பூ ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், அதிக உடல் எடையைக் குறைக்கவும் பயன்படுகிறது. புரதம், கார்போஹைட்ரேட்டுகள், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் வேப்பம் பூவில் உள்ளன.
இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் செரிமானத்தை சீராக்கும். குடல் இயக்கத்தை மேம்படுத்தும். இதன் மூலம் பசி கட்டுப்படுத்தப்பட்டு குறைவாக சாப்பிட உதவும். எனவே எடை குறைப்பு எளிதாகும். மேலும் வேப்பம் பூவில் உள்ள மூலக்கூறுகள் அதிக கலோரிகளை எரிக்க உதவும்.
இது ரத்தத்தை சுத்திகரிக்க உதவுவதால், தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உடலில் இருந்து வெளியேறும். உடலில் இருந்து நச்சுக்களை நீங்குவதால் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
கொழுப்பு வளர்சிதை மாற்றத்திற்குக் காரணமான ஹார்மோனைத் தடுக்க வேப்பம் பூ உதவுகிறது. ஆகவே, வேப்பம் பூக்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, நீரில் ஊற வைத்து தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் பருமன் குறையும்.
வேப்பம்பூவை தேனுடன் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல் எடையில் மாற்றத்தைக் காண முடியும்.
வேப்பம் பூவை உலர்ந்த நிலையிலும், பொடியாகவும் பயன்படுத்தலாம். இருந்தாலும் உடல் எடை குறைப்புக்கு பயன்படுத்தும்போது, புதிதாக பறித்த வேப்பம் பூக்களை பயன்படுத்துவதே சிறந்தது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.