உக்ரைன் மீது போர் தொடுக்க ஆணையிட்டார் ரஷ்ய அதிபர் புடின்
மாஸ்கோ; உக்ரைன் மீது போர் தொடுக்கும்படி ரஷ்ய நாட்டு அதிபர் புடின் இன்று காலை உத்தரவிட்டார். ரஷ்ய நேரப்படி அதிகாலை 6 மணிக்கு அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ரஷ்யா உக்ரைன் இடையே கடந்த பல வருடங்களாக மோதல் அதிகரித்துக்கொண்டே வந்தது. அதிலும் கடந்த 25 வருடங்களில் மோதல் புதிய விஸ்வரூபம் எடுத்தது. இந்த நிலையில்தான் தற்போது ரஷ்யா – உக்ரைன்மோதல் என்பது போராக உருவெடுத்து உள்ளது.
இன்று காலை உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் போர் தொடுக்க ஆணையிட்டார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின். ஏற்கனவே அந்நாட்டு பாராளுமன்றம் வெளிநாட்டு மண்ணில் ஆயுத தாக்குதல்கள் நடத்த ரஷ்ய ராணுவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் அதிகாரபூர்வ அனுமதி அளித்தது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.