இப்போதும் வாய்ப்பு கிடைத்தால் குத்து பாடல்களில் ஆட தாயார்- சுஷ்மிதா சென்
பிரபல இந்தி நடிகை சுஷ்மிதா சென் தனது ”குத்து பாடல்கள்” பற்றி பெருமைப்படுவதாக கூறியுள்ளார்.
எனது சினிமா வாழ்க்கையில் பல ஆண்டுகளாக ‘குத்து பாடல்கள்’ இடம்பெற்று உள்ளன. அதுகுறித்து நான் பெருமிதம் கொள்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முன்னணி கதாநாயாகன் அல்லது கதாநாயகி படங்களில் குத்து பாடல்களில் ஆடினால் அது வெறுப்பாக பார்க்கப்பட்டது.ஆனால் இப்போது அப்படி இல்லை. நான் குத்து பாடல்களில் ஆடுவதற்கு எப்போதும் தயாராக இருந்தேன்.
குத்து பாடல்களுக்கு நான் ஆட சம்மதித்ததால், என் முடிவுக்கு எதிராக எனது இரண்டு மேனேஜர்கள் என்னை விட்டு விலகிவிட்டனர். இசை என்பது இசை தான். மோசமான படமாக இருந்தாலும் அது உயிர்வாழும். இப்போதும் வாய்ப்பு கிடைத்தால் குத்து பாடல்களில் ஆட தாயாரக உள்ளேன்” என்று கூறினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.