இந்தியாவில் மீண்டும் 15 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,148 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று 15,102 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,148 ஆக குறைந்தது. தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 1.22 சதவீதம் ஆக உள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.